'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் |
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் பூஜா ராமச்சந்திரன். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் கவர்ச்சி போட்டோக்களை பகிர அஞ்சாதவர். கணவர் உடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களையும் அவ்வப்போது பகிருவார். தற்போது சிறிய நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் கவர்ச்சியான போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
அதோடு, ‛‛37 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உடல் ரீதியாக, வலிமையாக நான் உணர்ந்ததில்லை. என் வாழ்க்கையை, எண்ணங்களை நான் நேசிக்கிறேன். நல்லது, கெட்டது எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக் கொண்டேன். இங்கும் எதுவும் நிரந்தரமில்லை. காலத்துக்கு ஏற்றபடி மாறிக் கொண்டே இருக்கும். என் வாழ்வில் நான் கற்ற வலி, பாடங்கள், காதல், மகிழ்ச்சி, ஏமாற்றங்கள், தோல்வி என எல்லாவற்றையும் கடந்து இந்த வாழ்க்கையை கொண்டாடுகிறேன்'' என பதிவிட்டுள்ளார் பூஜா.