
வலிமை பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன்
இந்நிலையில் தான், அவர்களின் கோரிக்கை உச்சத்திற்கு சென்றதை அடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டதால் அப்டேட் வெளியாகவில்லை. இந்த நிலையில், நேற்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 65ஆவது படம் குறித்த பர்ஸ்ட்லுக், டைட்டீல் வெளியிடப்பட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் நொந்து போனார்கள.
இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது அப்படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், ‛‛வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட பாடல் உள்ளது. அதேபோல் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது"" என்று தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!