என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் | எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ் | அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா | வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க தேடிவந்த 16 படங்களை மறுத்தேன்; நடிகை சோனா ஹைடன் | துரந்தர் படம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் : ஆதித்யா தர் | அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த் | ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் |

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திர அரசு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகளை அறிவித்திப்பதால் நேற்று முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ராஜமவுலி.
காலை 7 மணிக்கே மேக்கப் போட்டு விட்டு கேமரா முன்பு வந்திருக்கிறார் ராம்சரண். அதோடு அவர் நடித்து வரும் ஆச்சார்யா படப்பிடிப்பும் தொடங்குவதால் இன்னும் 30 நாட்களுக்கு டபுள் ஷிப் போட்டு இந்த இரண்டு படங்களிலுமே மாறி மாறி நடிக்கும் ராம்சரண், இந்த 30 நாட்களில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான தனது அனைத்து காட்சிகளிலும் நடித்த முடித்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ராஜமவுலி.




