சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப் | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் “படகோட்டி” பட அனுபவங்கள் | அட்வான்ஸ் கேட்டு நச்சரிப்பு: பாலிவுட்டுக்கு 'ஜூட்' விட்ட நடிகர் | தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் வாங்கியுள்ளார். படத்தைப் பார்த்த சல்மான் கான் படத்தில் உள்ள 'மாஸ்டர்' கதாபாத்திரத்தை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, 'மாஸ்டர் கதை'யை முற்றிலுமாக மாற்றச் சொல்லிவிட்டாராம்.
'மதுப்பிரியர் மாஸ்டர்' கதாபாத்திரம்தான் சல்மான் கானை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதுவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவே, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே அவர் அதிகம் விருப்பப்பட்டாராம். அதன் காரணமாகத்தான் அவர் படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியிருக்கிறார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிமேல், தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கில் நடிக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம். அதன் விளைவுதான் இந்த மாற்றம் என்கிறார்கள்.