தான் இயக்கிய 'எல்ஐகே' படம் தோல்வியடைந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ்சிவனின் புலம்பல் பதிவு | 100ஐத் தொடும் 2026 தமிழ் சினிமா ரிலீஸ் | 'கருப்பு' படத்தின் ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ வெளியானது! | பிரியங்கா சோப்ராவின் சண்டே ஸ்பெஷல்- சோசியல் மீடியாவில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்! | அபிஷன் ஜீவிந்த் இயக்கும் 2வது படத்தில் சிவராஜ் குமார்! | ஜோதிகாவுடன் 18ம் படி கருப்பணசாமியை தரிசனம் செய்த சூர்யா! | ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் |

சுதந்திர போராட்ட காலத்து கதையில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலர் நடிக்கும் இப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியாமல் வெளியிடும் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் வசன காட்சிகளை படமாக்கி விட்ட ராஜமவுலி, இன்னும் மீதம் உள்ள இரண்டு பாடல் காட்சிகளை வருகிற ஜூலை 1-ந்தேதியில இருந்து படமாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பாடல் காட்சியை படமாக்க 30 நாட்களை எடுத்துக் கொள்ளப் போகிறாராம். அந்த வகையில் பாகுபலி படத்தை விடவும் இந்த படத்தின் பாடல் காட்சிகளை மிக பிரமாண்டமாக படமாக்குகிறாராம் ராஜமவுலி.




