Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பஞ்சதந்திரம் 2' : கமல்ஹாசன் முடிவெடுப்பாரா ?

06 ஜூன், 2021 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Will-Panchathanthiram-2-will-happend

தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வரவேற்பைப் பெற்றாலும், சில தோல்வி அடைந்துள்ளன.

இருந்தாலும் ரசிகர்கள் தாங்கள் அடிக்கடி ரசிக்கும் சில படங்களின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமே என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். அப்படியான படங்களில் ஒன்று 'பஞ்சதந்திரம்'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் மற்றும் பலர் நடித்து 2002ம் ஆண்டில் வெளிவந்த படம்.

இப்படம் வெளிவந்து 19 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் டிவியில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு படம் முழுவதும் நகைச்சுவை விரவியிருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி 'பஞ்ச' ஐவரில் ஒருவராக நடித்த நடிகர் ஸ்ரீமன்னிடம் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

அதற்கு அவர், “'பஞ்சதந்திரம்' படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்குமா பலர் என்னிடம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்தவரையில் கமல்ஹாசன் சார் முடிவு செய்தால் அது நடக்கும். உங்களைப் போலவே படத்தின் மொத்த குழுவினரும் அது நடக்குமா, நடக்காதா என காத்துக் கொண்டிருக்கிறோம்,” என டுவீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே, 'இந்தியன் 2' என்ற இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து கமல்ஹாசன் சிக்கிக் கொண்டுள்ளார். அதனால், இன்னொரு இரண்டாம் பாகமா என அவர் அதிர்ச்சியடையும் வாய்ப்புண்டு. சினிமா சென்டிமென்ட்டுகளை கமல் நம்ப மாட்டார் என்றால் 'பஞ்ச தந்திரம்' படத்தைப் பற்றி அவர் யோசிக்கலாம். ரசிகர்களின் ஆசைக்கும் மேலாக ஸ்ரீமன்னின் ஆசையையும், படக்குழுவினரின் ஆசையையும் கமல் நிறைவேற்றுவாரா ?.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கேரள ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ஷிவானிகேரள ஸ்டைலில் வீடியோ வெளியிட்ட ... 'கேஜிஎப் 2' - பெரும் நம்பிக்கையுடன் இயக்குனர் பிரஷாந்த் நீல் 'கேஜிஎப் 2' - பெரும் நம்பிக்கையுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - Thanjavur,இந்தியா
06 ஜூன், 2021 - 22:43 Report Abuse
Ram மூக்கு கொஞ்சம் போடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க சொல்லும் போங்க ஜீன்சு
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
06 ஜூன், 2021 - 19:04 Report Abuse
Venkat thats fine..who can write dialogue like crazy Mohan?
Rate this:
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
06 ஜூன், 2021 - 14:11 Report Abuse
Ponniyin Selvan அவுரு அப்படியே முடிவு எடுத்துட்டாலும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in