பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இப்படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. இப்படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கச் செல்லக் கூடாதென லைகா வழக்கு தொடர்ந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே நாடினர்.
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கமல்ஹாசனும் இந்த விவகாரத்தில் லைகா மற்றும் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக இம்மாதத் துவக்கத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவருடைய பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவில்லை என்கிறார்கள். இதனால், நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கலாம் என முடிவெடுத்துவிட்டாராம்.
இயக்குனர் ஷங்கரை நீதிமன்றம் இப்படத்தை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் உடனடியாக கமல்ஹாசனும் படத்தில் நடித்து முடிக்கத் தேதிகளைக் கொடுப்பாராம். இல்லையெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடிக்கும் 'விக்ரம்' படத்தில் நடிக்கப் போய்விடுவார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.




