கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று யோகா செய்யும் அவருடைய புகைப்படம் ஒன்றையும், வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அவற்றைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல வயது மிகவும் குறைந்து தெரிகிறார் கீர்த்தி.
“எனது தினசரி யோகாவில் தான் எனக்கு அமைதி வருகிறது,” எனப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி. கடந்த சில வாரங்களிலேயே இந்த அளவிற்கு அவர் தன்னுடைய உடல் எறையைக் குறைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சில பிரபலங்கள் கூட கீர்த்தியின் மாற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
உடற்பயிற்சியும், யோகா பயிற்சியும் உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும். அவற்றை விடாமல் செய்பவர்கள் எத்தனை வயதானலும் இளமையாகவே இருப்பார்கள். கீர்த்தியின் இந்த மார்க்கண்டேயினி தோற்றத்தின் ரகசியமும் அதுதான் போலிருக்கிறது.




