Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக் பாஸ்' 5வது சீசனிலும் கமல்ஹாசன் தான்...

22 மே, 2021 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Kamal-will-host-biggboss-season-5

தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் கடந்த நான்கு வருடங்களாக அதிக பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ். முதல் சீசனுக்குப் பிறகு அடுத்து ஒளிபரப்பான இரண்டாவது, மூன்றாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் ஆரம்பமாவதற்கு முன்பு கமல்ஹாசன் அவற்றைத் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும், கமல்ஹாசன் நான்கு சீசனையும் இடைவிடாமல் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் ஒளிபரப்பாக உள்ள ஐந்தாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

தேர்தலில் கமல்ஹாசன் தோல்வியடைந்த பிறகு எப்படியும் அவர்தான் ஐந்தாவது சீசனைத் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும். ஐந்தாவது சீசனையும் அவரே தான் தொகுத்து வழங்குவார் என்ற உறுதியான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகி முக்கிய நிர்வாகி ஒருவர் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த மார்ச் மாதமே பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார். அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய கட்சி செலவுகளுக்குக் கொடுத்தாகவும் அவர் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே கட்சி செலவுகளுக்காக கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டார். எனவே, இந்த வருடத்தின் ஐந்தாவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார். ஆனால், நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பதுதான் கேள்வி. கடந்த வருடம் போலவே அக்டோபர் மாதம் ஆரம்பமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் - சாதனை விற்பனையில் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைஆர்ஆர்ஆர் - சாதனை விற்பனையில் ... தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 18 + சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 18 + ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

madhavan rajan - trichy,இந்தியா
23 மே, 2021 - 19:41 Report Abuse
madhavan rajan எலக்ஷனில் விட்டதை அங்கெ பிடித்துவிடுவார். சபாஷ்.
Rate this:
saravan - bangaloru,சவுதி அரேபியா
23 மே, 2021 - 18:31 Report Abuse
saravan எலிமினேட் செஞ்சாச்சே...கோல்ட் கார்டு ரே என்ட்ரி யா? இம்சை தொடரும்
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
22 மே, 2021 - 16:28 Report Abuse
a natanasabapathy தமிழக அரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்
Rate this:
sangu - coimbatore,இந்தியா
22 மே, 2021 - 14:27 Report Abuse
sangu மக்கள் முடடாள்கள் அல்ல, முடடாளாக நடிப்பார்கள், அரசியல் வாதிகள் அறிவாளிகள் இல்லை, அப்படி நடிப்ப்பார்கள், இவரை MLA ஆக்கி இருந்தால் சம்பளம் தவறாமல் வாங்கி, அளவன்சும் வாங்கி, தனக்கு தெரிந்த மற்ற மொழியிலும் bigpaas ஐ தொகுத்து தருவார்.
Rate this:
22 மே, 2021 - 16:46Report Abuse
Soundar இவருக்கு வேற வேலையே இல்லையா... கேவலமான ஒளிப்பதிவு இந்த பிக்பாஸ் தயவு செய்து இதை தடை போடுங்கள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in