பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் |

இசையமைப்பாளர் ஜான் அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் " நீயும் நானும்" . இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார். பாடலுக்கு வரிகள் கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.
‛‛தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கதக்கது. தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது. விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடமே உண்டாகும்'' என்கிறார் ஜான் A அலெக்ஸ்சிஸ்
நீயும் நானும் பாடலை இசையமைத்து, தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜான் தற்போது மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் இசையமைப்பதிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார்.




