நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் |

'இந்தியன் 2' பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டு வழக்கு மீண்டும் நீதிமன்றம் பக்கமே சென்றது.
இந்தியன் 2' படத்தை முடிக்கும் வரையில் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற லைகாவின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார் ஷங்கர்.
அதனால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம் ஷங்கர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுத்த பிறகே அவர் தெலுங்கு, ஹிந்தியில் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் வடிவேலு மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து அவரை படங்களில் நடிக்க வைக்க விடாமல் மறைமுக அழுத்தம் கொடுத்தவர் ஷங்கர் என கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதே பார்முலாவைப் பயன்படுத்தி ஷங்கரையும் தடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முயல்கிறதாம்.




