சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லவில்லை என்றாலும் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவானது. இதனை கருத்தில் கொண்டு சேனல் நிர்வாகம் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறக்கியது.
தனது குழந்தைத்தனமான சேட்டைகளால் அங்கும் ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி. சினிமாவில் காமெடி நடிகைகள் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் சிவாங்கிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வரும் சிவாங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகள் 15 பட ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் சிவாங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.