தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் |

காமெடி நடிகர், ஹீரோ, சமூக ஆர்வலர் என தன்னை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் மறைந்த நடிகர் விவேக். இவருக்கு படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. சமீபகாலமாக அதற்கான பணியில் தீவிரமாக இறங்கி இருந்தார். இந்நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.
இதுகுறித்து நடிகை இந்துஜா கூறுகையில், ‛‛மறைந்த நடிகர் விவேக் அவர்கள் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் நான் நடிப்பதாக இருந்தது. அதற்கான மீட்டிங் இந்த வாரம் இருந்தது. ஆனால் தற்போது விவேக் சார் மறைந்து விட்டார்'' என தெரிவித்துள்ளார்.
இவரைப்போன்று சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறுகையில், ‛‛நடிகர் விவேக் நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.




