ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் இப்படத்திற்கு ஓட்டு என டைட்டில் வைத்துள்ளனர்.
இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகும் இந்த படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கியவர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2007ல் அதிசயம் என்கிற மலையாள படத்தில் நடித்த ஜாக்கி ஷெராப்புக்கு அங்கே இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.. நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.




