தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணி வண்டி. சமஸ்கிருதி, பால சரவணன், தம்பி ராமய்யா, கன்னட நடிகை வினு தலால் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறியதாவது:
தாயை இழந்த உமாபதி தந்தை தம்பி ராமய்யாவின் அரவணைப்பில் வளர்கிறார். ஆனால் எப்போதுமே அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஒத்துப்போகாது. தன்னை படிக்க வைத்து பெரிய ஆளாக்கவில்லை என்று தந்தை மீது உமாபதிக்கு கோபம். அவர் தனது நண்பன் பாலசரவணனுடன் இணைந்து கல்யாண வீடு, மற்றும் ஓட்டல்களுக்கு சிறிய வண்டியில் தண்ணிர் சப்ளை செய்கிறவர். பகல் முழுக்க கடுமையாக வேலை செய்துவிட்டு, ராத்திரியானால் குடித்து விட்டு ரகளை செய்வார்கள்.
கதை களம் மதுரை. புதிதாக வருகிறார் மாவட்ட வருவாய் அலுவலர் வினுதலால். அவர் பக்கா நேர்மையான அதிகாரி. அதிரடியான அதிகாரியும்கூட அவருக்கு ஒரு வீக்னஸ் இருக்கிறது. திருமணத்தில் நம்பிக்கை இல்லாத அவர் அதிக ஆண் நண்பர்களை விரும்புவார். அவர்களுடன் ஜாலியா இருந்து விட்டு போரடிக்கும்போது கழற்றி விட்டு விடுவார்.
அவர் ஒரு ஆணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ ஒன்று உமாபதிக்கு கிடைத்து விடுகிறது. வினு தலாலால் பாதிக்கப்பட்ட மதுரை பெரும்புள்ளிகள் அவரை பழிவாங்க காத்திருக்கிறார்கள். இந்த வீடியோ அவர்கள் கைக்கு கிடைத்தா, அதை வைத்துக் கொண்டு தண்ணி வண்டி உமாபதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.




