டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இறுதிச்சுற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சூரரைப்போற்று. விமான துறையில் சாதனை படைத்த கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான படம் . விமர்சகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக சாதனை படைத்தது. சூர்யா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருது வரைக்கும் சென்று வந்தது.
இந்த படம் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. சுதா கொங்கராவே இந்தியில் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் வெளிவந்த அமேசான் ப்ரைம் டைம் நிறுவனம், படத்தை உதான் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. வருகிற 4ம் தேதி முதல் இந்த படத்தின் இந்தி பதிப்பை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். இதன் மூலம் சூரரைப்போற்று இந்தி ரீமேக் முயற்சி கைவிடப்பட்டது உறுதியானது.




