Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது

01 ஏப், 2021 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-Will-Receive-Dadasaheb-Phalke-Award

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்திற்கு 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல வகைகளில் தனது பங்களிப்பை அளித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் சாயம் பூசாதீர்கள்


தமிழக தேர்தலை மனதில் வைத்து விருது கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, இது, திரையுலகம் தொடர்பான, 50 ஆண்டுகளாக உழைக்கும் ஒருவருக்கு கொடுக்கும் விருது. இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள், என, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். வரும், மே 3ம் தேதி, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டில்லியில் நடக்கிறது. அதில், ரஜினிக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

விருது வரலாறு
இந்திய திரையுலகின் முதல் திரைப்படம், ராஜா ஹரிச்சந்திரா. இதை இயக்கியவர், பால்கே; இந்திய திரைப்பட உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது நினைவாக, 1969 முதல், தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வென்றவர்களுக்கு, தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை, 10 லட்சம் ரூபாய் பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.

இதற்கு முன் விருது பெற்றவர்களில் சிலர்

1969 தேவிகா ராணி, நடிகை -- ஹிந்தி

1982 எல்.வி.பிரசாத், தயாரிப்பாளர் - தெலுங்கு, தமிழ், ஹிந்தி

1984 சத்ய ஜித்ரே, இயக்குனர் - வங்காளம்

1989 லதா மங்கேஷ்கர், பாடகி - ஹிந்தி மராத்தி

1992 புபென் ஹசாரிகா பாடகர் - அசாம்

1994 திலீப் குமார், நடிகர் - ஹிந்தி

1995 ராஜ்குமார், நடிகர் - கன்னடம்

1996 சிவாஜி, நடிகர் - தமிழ்

2004 ஆடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் - மலையாளம்

2010 பாலசந்தர், இயக்குனர் - தமிழ்2018 அமிதாப் பச்சன், நடிகர் - ஹிந்தி

2019 ரஜினி, நடிகர் - தமிழ்


விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் இருந்து திரைக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சீறும் கேள்விகளை கர்ணன் ஏந்தி வருவான் - தனுஷ்சீறும் கேள்விகளை கர்ணன் ஏந்தி ... ரஜினிக்கு 100 சதவீதம் பொருத்தமான விருது : கமல் வாழ்த்து ரஜினிக்கு 100 சதவீதம் பொருத்தமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Naduvar - Toronto,கனடா
05 ஏப், 2021 - 07:49 Report Abuse
Naduvar தொடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சாம்...து
Rate this:
Vijay - Chennai,இந்தியா
02 ஏப், 2021 - 12:35 Report Abuse
Vijay மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இந்த விருதுக்கு அவர் தகுதியானவரா?
Rate this:
Palani - VAZHMANGALAM,இந்தியா
02 ஏப், 2021 - 08:55 Report Abuse
Palani இந்த தேர்தல் நேரத்தில் அவசரமாக விருது வழங்குவதற்கான காரணம் என்ன?
Rate this:
ashwin - Seattle,யூ.எஸ்.ஏ
01 ஏப், 2021 - 18:31 Report Abuse
ashwin This is against election rules. Election commission should take action. Cheap central govt. announcing award for an actor during election time to get the actor's fans vote. Very bad and cheap politics by BJP Govt.
Rate this:
சுந்தர் சி, சென்னை தேர்தல் முடிந்து இந்த விருது அறிவித்து இருந்தால் உண்மையிலேயே பாராட்டு இருக்கலாம். அரசியல் தவிர்த்து ரஜினி இந்த விருதுக்கு தகுதி ஆணவர்தான்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in