கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் |

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும், தனது 65வது படத்தில் விஜய் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக தளபதி 65 என்றே அழைத்து வருகின்றனர். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 31) பூஜையுடன் ஆரம்பமானது. படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்திலேயே படத்தின் பூஜை நடந்துள்ளது.
![]() |
இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. குறிப்பாக விஜய்யின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடர்ந்த முடி, லேசான தாடி என அவரது லுக்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விரைவில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. அதையடுத்து ரஷ்யாவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக ஏற்கனவே இயக்குனர் நெல்சன் லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார்.