தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீனிவாசனும் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக குஷ்பு, நமீதா, கவுதமி, விந்தியா, ராதாரவி, செந்தில் என பல திரையுலகினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல் கமலுக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், தற்போது கமலின் அண்ணன் மகளான நடிகை சுகாசினியும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கமல் கட்சியின் சின்னமான டார்ச்லைட்டை கையில் வைத்துக்கொண்டு சுகாசினி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபடாத சுகாசினி, முதன்முறையாக தனது சித்தப்பா கமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




