பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. 'பாகமதி, சைலன்ஸ்' ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் அவர் நடித்தார். 'சைரா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்தார்.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்து தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். ஆனால், அப்படம் விவகாரமான கதை கொண்ட படம் என்கிறார்கள். படத்தில் 40 வயது பெண் கதாபாத்திரத்தில அனுஷ்கா நடிக்கப் போகிறாராம். அவர் படத்தில் 20 வயது இளைஞனரைக் காதலிக்கும் கதாபாத்திரமாம். 20 வயது இளைஞராக 'ஜதி ரத்னலு' படத்தில் நடித்த நவின் பொலிஷெட்டி நடிக்கப் போகிறார்.
நிஜ வாழ்க்கையிலும் 40 வயதைத் தொட்டுள்ள அனுஷ்கா இன்னமுத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது.