எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தின் டிரைலர் படத்தின் நாயகி கங்கனா ரணவத் பிறந்த நாளான நாளை மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பற்றிய மேலும் சில அப்டேட்களை கங்கனா கொடுத்துள்ளார்.
“திரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஒரு மேஜிக்கல் ஜோடியாக இருந்தனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது போல ஒரு ஜோடி வராது. 'தலைவி' படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடையை பெறுவதும், அதை சில மாதங்களுக்குள் இழப்பதும். இன்னும் சில மணி நேரங்களுக்குள் அந்தக் காத்திருப்பு முடிவடைய உள்ளது. ஜெயா என்றென்றும் உங்களுக்காக,” என படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
'தலைவி' படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.