ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிதான் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக இருக்கும் மணிமேகலைக்கு கடந்த வாரம் வீட்டில் சிறு விபத்து ஏற்பட்டது. அவரது காலில் கொதிக்கும் நீரை ஊற்றிக் கொண்டுள்ளார். அதனால், வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவரை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பார்க்க வாய்ப்பில்லை.
இதனிடையே, நிகழ்ச்சியில் உள்ள 'குக்'குகளில் ஒருவரான ஷகிலா, மணிமேகலை வீட்டிற்குச் சென்று அவரை நலம் விசாரித்துள்ளார். அது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மணிமேகலை, “மம்மி, நேரம் ஒதுக்கி என்னை வந்து சந்தித்ததற்கும், ஆறுதலான வார்த்தைகளைக் கூறியதற்கும் நன்றி, நீங்கள் மிகவும் அன்பாவனவர்” என நெகிழ்ந்துள்ளார்.
ஆபாசப்பட நடிகையாக அதிகம் அறியப்பட்ட ஷகிலாவின் இமேஜை இந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி முற்றிலுமாக மாற்றிவிட்டது. நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் அவரை 'மம்மி' என்று அழைத்து பாசத்தைக் கொட்டுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் மிரண்டு போயுள்ள போட்டி டிவிக்கள் அது போலவே சமையல் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.