ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் முக்கியமானவர். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர், இப்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை எடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிறு அன்று மரணத்தை தழுவினார். அவரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை தந்தது.
அவர் மறைந்து இரு தினங்கள் ஆன நிலையில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. சகோதரரின் மறைவு தாங்க முடியுமாமல் ஜனநாதனின் சகோதரி லட்சுமி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு இழப்புகள் அவரது குடும்பத்தை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.




