மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போலவே இம்முறைத் தேர்தலிலும் நடிகர், நடிகையர் பலர் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக களமிறங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் மயில்சாமி. இதனால் அத்தொகுதியில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டே தேர்தலில் களமிறங்கி உள்ளார்.