ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? |

கடந்த சில மாதங்களாகவே தெலுங்கில் வெளியான படங்களை கவனித்து பார்த்தால், அது சின்ன படமோ, பெரிய படமோ, அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து கலந்து கொண்டு படக்குழுவினரை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த் நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள 'ஸ்ரீகரம்' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, 'சர்வானந்த் எனக்கு இன்னொரு ராம்சரண் போன்றவர்” என வாழ்த்தி பேசியுள்ளார்.
அந்த நிகழ்வில் சிரஞ்சீவி பேசும்போது, “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என கூறி ராம்சரண் என்னை கேட்டுக்கொண்டார். ராம்சரணும் சர்வானந்தும் சிறுவயது முதல் நண்பர்கள்.. சர்வானந்த் என் வீட்டில் வளர்ந்த பையன்.. அதனால் எனக்கு இன்னொரு ராம்சரண் போன்றவர். அவருக்கு நடிப்பில் விருப்பம் இருக்கிறதா என தெரியாமலேயே தான், என்னுடன் சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்க வைத்தேன்.. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வேற லெவல். அவருக்குள் இருந்த நெருப்பு அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது. இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துவிட்டேன். அப்போதே இந்தப்படத்தின் வெற்றி உறுதி என தெரிந்துவிட்டது” என கூறி, சர்வானந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நெகிழ வைத்துவிட்டார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி தற்போது கம்மம் பகுதியில் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதால், அவருக்காகவே இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை, கம்மம் பகுதியிலேயே நடத்த சர்வானந்தும் ஸ்ரீகரம் படத்தின் தயாரிப்பாளரும் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




