வைரலாகி வரும் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' டிரைலர் | ராஷ்மிகாவின் 30வது பிறந்தநாளில் வெளியான 'மைஸா' படத்தின் அதிரடி போஸ்டர்! | 'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது! | 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது! | 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்! | அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர். ரஹ்மான்! | ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! | பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்” | என் அண்ணன், பாட்ஷா, டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள் | டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் |

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக “மாஜா” என்ற தளத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ளார். இதில் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) என்ற பாடல், பிரபல பாடகி தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.
தீ கூறுகையில், ஒரு நிகழ்வில் பேசுவதற்கு எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வரும் ஆட்களில் நானும் ஒருவர். தென்னிந்தியாவின் திறமைமிக்க சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க, புதிய தளத்தை அறிமுகப்படுத்திய மாஜாவுக்கு நன்றி. அமித்தின் (Studio MOCA) அற்புதமான வேலைக்கு நன்றி. உலகின் சிறந்த கலைஞர்களில் ஒருவர் அறிவு. என் தந்தை என்பதை விட, மற்றொரு கலைஞராக சந்தோஷ் நாராயணன் உடன் பணியாற்றுவதில் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த பாடல் பா.ரஞ்சித்தின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. என் அம்மா தான் என் கடவுள். என்னை ஒரு கலைஞராக்குவதில் அவர் பெரும் அர்ப்பணிப்பை தந்துள்ளார் என்கிறார்.
பாடலாசிரியர் அறிவு கூறுகையில், ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால் இன்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, எனது பாடல் மிகப்பெரும் வெளியீட்டு நிகழ்வில் வெளியாகிறது. இப்படியான தளத்தை உருவாக்கிய மாஜாவிற்கும், இதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி. சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாக சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப்பார் என்றார்.
இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர்கள் மணிகண்டன், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், சுதா கொங்குரா, இசையமைப்பாளர்கள் தேவா, சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.