Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு செட்டாகுமா 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக்?

03 மார், 2021 - 17:02 IST
எழுத்தின் அளவு:
The-Great-Indian-Kitchen-tamil-remake-officially-begins

யதார்த்தமான பல திரைப்படங்களைக் கொடுப்பதில் மலையாள சினிமாவிற்கு நிகர் வேறு எதுவுமில்லை. பல வருடங்களாகவே மலையாள சினிமாவில் அப்படியான படங்கள் வெளிவந்து இந்திய அளவில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளன.

அந்த வரிசையில் ஜனவரி மாதம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஒரு படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் பலர் நடித்த படம் இது.

பழமையில் ஊறிப் போன ஒரு மலையாளக் குடும்பத்தில் புது மணமகளாகச் செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இப்படத்தின் கதை.

சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படத்தில் 1 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு அந்த பழமையான வீட்டின் சமையலறைதான் பிரதான கதைக்களமாக இருக்கும்.

அதிலேயே பலவிதமான கோணங்களில் பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாக இப்படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர் ஜியோ பேபி. மலையாள சினிமாவுக்கே உரிய ஒரு ஸ்பெஷலான படம் இது.

அந்த மாதிரியான கதை சொல்லாடல், காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

அப்படத்தை உள்ளது உள்ளபடியே ரீமேக் செய்தால் தமிழ் ரசிகர்களைக் கவர்வது எளிதல்ல. தமிழ் ரசிகர்களுக்காக மாற்றங்கள் செய்கிறேன் என பாடல்கள், வேறு கூடுதல் காட்சிகள் எனச் சேர்த்தால் அது ஒரிஜனல் படத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.

ஹிந்தியில் வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'டெல்லி பெல்லி' படத்தை தமிழில் 'சேட்டை' என ரீமேக் செய்து தோல்வியடைய வைத்த இயக்குனர் கண்ணன் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாட்டில் மூடப்படும் தியேட்டர்கள் அதிகரிப்பு...தமிழ்நாட்டில் மூடப்படும் ... புதிய கூட்டணியில் வெற்றி பெறுவாரா ஹரி ? புதிய கூட்டணியில் வெற்றி பெறுவாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

04 மார், 2021 - 11:54 Report Abuse
ஐஷ்வர்யன் ரொம்ப ரொம்ப பரிதாபம்..அந்த யதார்த்த பதிவு தமிழில் அத்தனை சுலபம் இல்லை. அதுவும் கண்ணன் போன்ற சராசரி இயக்குநருக்கு சாத்தியமே இல்லை என்பதை அவர் நன்மையைக் கருதியே பதிவிடுகிறேன். அதெல்லாம் ராம், சீனு ராமசாமி ஜாம்பவான்களுக்கே சாத்தியம். சுதா, ஹாலிதா போன்ற பெண் இயக்குநர்கள் முயன்றால் இன்னொரு பரிமாணத்தில் நிச்சயம் சிறப்பாக அமையும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in