நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் வரவேற்புடன் நல்ல வசூலை ஈட்டியது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அந்த சிக்கலிலும் அரங்குகள் நிறைந்து வசூலும் குவிந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவித்தார்கள்.
இருப்பினும் கடந்த மாதம் 29ம் தேதி படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டார்கள். அதில் வெளியான பின் தியேட்டர்களுக்கு அப்படத்தைப் பார்க்க மக்கள் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனால், அதையும் மீறி கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு மக்கள் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
படம் வெளியாகி 45 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் 50வது நாளைத் தொட உள்ளது. நாளை கூட சில தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.