'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் | மஹாராஜா 2ம் பாகத்திற்கு தயாராகும் விஜய்சேதுபதி | ஆரி அர்ஜுனனின் 'போர்த் புளோர்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா |

இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள்.
விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா நேற்று டுவிட்டர் தளத்தில் ஆபாசப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தால். வெறும் குட்டி டிரவுசரை மட்டும் அணிந்து மேலாடை எதுவுமில்லாமல் மார்பகப் பகுதிகளை தன் கையால் மூடியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படத்தில் அவருடைய கழுத்து செயினில் வினாயகர் உள்ள டாலர் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதற்கு இந்து மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து அவருக்கு கமெண்ட் செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்திய விவசாயிகள் போராட்டப் பிரச்சினையில் அவர் குரல் கொடுத்ததற்கு இங்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வேண்டுமென்றே அவர் இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக இப்படி போஸ் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.




