சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா | கேரள அரசு பஸ் புரமோஷனுக்காக 100வது படத்திற்கு முன்பே மோகன்லாலை இயக்கிய பிரியதர்ஷன் |

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி டான் படத்தில் இணையப்போகிறது. இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனியின் பெயருடன் சூரியின் பெயரும் இடம் பெற்றது.
அதையடுத்து, டான் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சூரி, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா -என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு சூரிக்கு ஒரு பதில் டுவீட் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில், ''நண்பா... பஸ்ட் டுவீட்ட ஒழுங்கா படிங்க. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்'' என்று அவரை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். பதிலுக்கு சூரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஒரு நகைச்சுவை காட்சியை பதிலாக கொடுத்துள்ளார்.