புதியவர் வி.விஜய் நடித்து, இயக்கி உள்ள படம் "விஷமக்காரன்". அனிகா விக்ரமன், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்பட இசை வெளியீட்டில் பேசிய விஜய், ""சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியது தான் இந்த விஷமக்காரன். இங்கு ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதை கூட முக்கியமில்லை. ஹீரோ தான் முக்கியம். ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்பேன். படம் தியேட்டரில் வெளியாகிறது"" என்றார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!