Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பமீலா ஆண்டர்சன் 5வது திருமணம்: மெய்காப்பாளரை மணந்தார்

30 ஜன, 2021 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Pamela-Anderson-married-5th-time

பேவாட்ச் திரைப்படங்கள், தொடர்கள் மூலம் உலகம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர் பமீலா ஆண்டர்சன். 53 வயதானலும் இப்போதும் அவர் கவர்ச்சி கன்னிதான். சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களை தொடர்ந்து திருப்பதிபடுத்தி வருகிறார்.

அவரது சினிமா வாழ்க்கை எப்படி இருந்தாலும், சொந்த வாழ்க்கை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். முதன் முறையாக டாமி லீ என்பவரை மணந்தார். 1995 முதல் 1998 வரை வாழ்ந்து அவருக்கு 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2006 ஆம் ஆண்டில் கிட் ராக் என்பவரை மணந்தார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே தயாரிப்பாளர் ரிக் சாலமன் என்பவரை மணந்தார். 2020 ஆம் ஆண்டில் தொழிலதிபர் ஜான் பீட்டர்ஸை மணந்தார்.

4 பேரை திருமணம் செய்தும் அவருக்கு ஏனோ திருமண வாழ்க்கை திருப்தியாகவே அமையவில்லை. இனி ஆடம்பர வாழ்க்கை தவிர்த்து இயற்கையோடு வாழப்போகிறேன். இனி சமூக வலைத்தள பக்கங்களிலும் இருக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டு தலைமறைவானார்.

இந்த நிலையில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு வெளியில் வந்துள்ள பமீலா ஒரு ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தான் தற்போத தனது மெய்காப்பாளர் டான் ஹேஹர்ஸ்ட்டை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

"என்னை நிஜமாக விரும்பும் ஒருவரின் கரங்களில் நான் இப்போது தஞ்சம் அடைந்துள்ளேன், கடந்த ஒரு வருடமாக அவர் எனக்கு பழக்கம். ஆனால் ஏழு ஜென்மங்கள் இணைந்து இருந்ததை போல உணர்ந்தேன். எனவே அவரை திருமணம் செய்தேன்" என்று உருகியுள்ளார் பமீலா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகும் விஷால்பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகும் ... அருண் விஜய்யுடன் மீண்டும் இணையும் யோகிபாபு அருண் விஜய்யுடன் மீண்டும் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 பிப், 2021 - 06:36 Report Abuse
J.V. Iyer இவர்கள் பணத்திற்காக தினம் ஒரு திருமணம் செய்வார்கள்.
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
01 பிப், 2021 - 12:57 Report Abuse
தாமரை செல்வன்-பழநி பாவம்....நான் மேய்க்காப்பாளரைதான் நினைத்து பாவப்படுகிறேன்.
Rate this:
ravi theja - chennai,ஆஸ்திரியா
30 ஜன, 2021 - 19:54 Report Abuse
ravi theja பமீலா ....நல்லா பாமில் இருக்கிறமா நீ ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in