ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ஆனபோதும் அதன்பிறகு அவர் ஏற்று நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்கள் அவரது இமேஜை பிட் பட நடிகராக மாற்றியமைத்து விட்டன. தொடர்ந்து இருட்டு அறை படங்களாகவே சென்றதால் எந்த படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதிர்ச்சி மனநிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருபவர், இயக்குனர்கள் பத்ரி, எழில் மற்றும் இன்னொரு புதிய இயக்குனரின் படம் என மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படங்களில் தனது கெட்டப்பையும் மாற்றி நடித்து, விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.




