டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் | சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால் | மோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | “போரை விரும்பாதவர்களுக்கான படம்” : நீளிரா படத்துக்கு சூர்யா பாராட்டு | இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர் | பேஷன் ஐகானாக உருவெடுக்கும் ஸ்ரீலீலா | உலக அரங்கில் மீண்டும் ராஷ்மிகா | அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில் | ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் மிஸ்டர்.எக்ஸ் படம் |

பாலிவுட்டை போன்று கன்னட சினிமாவிலும் போதை பொருள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் கர்நாடக காவல்துறையினர் கன்னட நடிகர், நடிகைகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 19 பேர் மீது கர்நாடக காவல் துறையினர் போதைப் பொருள்கள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
அதைத் தொடர்ந்து நடிகைகள் இருவரையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராகினி சஞ்சனா ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சஞ்சனாவுக்கு மட்டும் அவர் உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
ராகினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகினியின் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு மற்றும், நடிகை தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் "இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மனுதாரர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது உறுதியானால் கூட அவருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரையே தண்டனை விதிக்கப்படும்" என்று கூறி, ராகினிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 140 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் ராகினி இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.