
லூசிபர் கதையில் சிரஞ்சீவிக்கு ஏற்ப மாறுதல்: மோகன் ராஜா
இது சிரஞ்சீவியின் 153வது படமாகும். கொனிடல்லா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கம் ஐதராபாத் பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், கோபி அசந்தா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!