'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் நெடுநல்வாடை. அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கி இருந்தார். எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், மைம்கோபி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜோஸ் பிராங்கிளின் இசை அமைத்திருந்தார், வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தற்போது சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி, அதனை தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் செல்வகண்ணன் கூறியதாவது: ஒரு நல்ல படைப்புக்காக நாம் சிலவற்றை தியாகம் செய்யும் போது அந்தப்படைப்பு நிச்சயம் நமக்கான அங்கீகாரத்தைத் தந்தே தீரும். அந்த நம்பிக்கைக்குச் சான்றாக இப்படத்தின் தெலுங்கு வெர்சனைப் பார்த்துவிட்டு பாராட்டுபவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது. படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.




