காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
வெளிநாடுகள் பலவற்றிலும் 'மாஸ்டர்' படத்தைத் திரையிட தியேட்டர்காரர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த கொரோனா காலத்தில் ஹாலிவுட் படங்களைக் கூட தியேட்டர்களில் வெளியிடத் தயங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததற்கு வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் தியேட்டர் நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்தன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் எமிரேட்ஸில் 'மாஸ்டர்' படம் சுமார் 50 தியேட்டர்களில் மட்டும்தான் வெளியானதாம். இருந்தாலும் கொரோனா தளர்வுகளுக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூலை 'மாஸ்டர்' படம் முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களான 'டெனட், வொன்டர் உமன்' ஆகிய படங்கள் சுமார் 200க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர் மற்றும் 8 லட்சம் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலித்ததாம். ஆனால், 'மாஸ்டர்' படம் 50 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி 1.4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதே போல் படம் வெளியான மேலும், பல வெளிநாடுகளில் 'மாஸ்டர்' படம் சீக்கிரத்தில் லாபத்தைக் கொடுத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.




