
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்
வத்திக்குச்சி படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். டிரைவர் ஜமுனா என பெயரிட்டுள்ள இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கிரைம், த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில்,கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால், படத்திற்கு எதிர் பார்ப்பு எகிறி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!