நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? |

எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர்கள் தான் கவுண்டமணி-செந்தில் இருவரும். இதில் கவுண்டமணி சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார்.. ஆனால் செந்திலுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. சில வருடங்களுக்கு முன் செந்தில் கதாநாயகனாக நடிக்க, ஆதிவாசியும் அதிசிய பேசியும்' என்கிற படம் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி பாராட்டு பெற்ற 'ஒரு கிடாரியின் கருணை மனு' படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, நடிகர் செந்திலை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் செந்தில் பல வருட சிறைதண்டனை பெற்ற குற்றவாளியாக நடிக்கிறாராம். மீண்டும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்த செந்திலை, சுரேஷ் சங்கையா சொன்ன கதை கதையின் நாயகனாக நடிக்க உடனே சம்மதிக்க வைத்து விட்டதாம். அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வரும் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.




