'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய சிம்பு, ''இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி தான் அதிகம் உள்ளது. போட்டி, பொறாமை, அடுத்தவர்களை குறை சொல்வது இதெல்லாம் தான் அதிகம் நடக்கிறது. முதலில் நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதையும், மற்றவர்களிடமிருந்து அறிவுரை கேட்பதையும் நிறுத்த வேண்டும். மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டேன். அந்த சோகத்தில் அதிக எடை போட்டேன், படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. ஆனால் இறைவன் என்னுடன் இருந்து எல்லாவற்றையும் மாற்றினார். கடவுள் வேறு எங்கும் இல்லை, உங்களுடன் தான் இருக்கிறார். இனி பேச ஒன்றுமில்லை செயல் தான். அடுத்ததாக மாநாடு, பத்து தல படங்களிலும் இது தவிர்த்து இன்னும் சில படங்களிலும் நடிக்கிறேன். மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறேன், அது தீபாவளிக்கு வெளியாகும் என்றார்.




