விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா | முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள் | அண்ணன் இளையராஜா பற்றி தவறான தகவல் பரப்பாதீர்கள் : தம்பி கங்கைஅமரன் ஆதங்கம் | அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி | ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில் | ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள் | ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி | அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள் |

பிரபு, குஷ்பு நடிப்பில் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய சின்னதம்பி. பாஞ்சாலங்குறிச்சி, ஜல்லிக்கட்டுகாளை, கல்யாண கலாட்டா, உத்தமராசா, பாண்டிதுரை, பிக்பாக்கெட், மதுரைவீரன் எங்க சாமி, உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் பாலு. இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலு மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




