மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்நிலையில் பாகுபலி தி எடர்னல் வார் படைப்பை முன்னிறுத்தி நடந்த அனிமேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமவுலி அளித்த பேட்டியில், வாரணாசி படம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டோம். முக்கியமான மற்றும் பிரமாண்டமான சண்டை காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது கதையை இணைக்கும் சிறிய காட்சிகளை படமாக்கி வருகிறோம். அதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!