
சர்தார் 2 : செப்டம்பர் 10 ரிலீஸ்
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் முடிவடைந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலே படம் வெளியீடு அப்படியே தள்ளிப் போனது.
கார்த்தி நடித்து இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த "வா வாத்தியார்" படம் படுதோல்வி அடைந்தது. இதனால், "சர்தார் 2" படத்தையும் உடனே வெளியிடவில்லை.
தற்போது செப்டம்பர் 10ம் தேதியன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். அதற்கே இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது.
இப்படத்தின் முதல் பாகமான "சர்தார்" படம் 2022ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!