
கேடி - தி டெவில் : வெளியிட்ட டிரைலர் வாபஸ்
ஆனால், டிரைலர் வெளியான மறுநாளே இந்த டிரைலரை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் யு டியூபில் வெளியிடப்பட்ட "KD: The Devil" திரைப்படத்தின் டிரைலரில், சான்றிதழ் வழங்கும் செயல்முறையின் போது கவனக்குறைவாக சில சான்றளிக்கப்படாத உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
எனவே, நாங்கள் அந்த டிரைலரை நீக்கிவிட்டோம், மேலும் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம். இந்தக் கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம், மேலும் அனைத்து சான்றிதழ் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
"ஜனநாயகன்" படம் ஏற்கெனவே சென்சார் சிக்கலில் தவித்து வருகிறது. இந்நிலையில் அவர்களது "கேடி தி டெவில்" படத்தின் டிரைலரிலும் இப்படி சான்றிதழ் சர்ச்சையை அவர்களே உருவாக்கியுள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!