நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பெண் பாடி பில்டர் ஆர்த்தி கிருஷ்ணா. 31 வயதாகும் ஆர்த்தி, 'மிஸ் கேரளா பிட்னஸ்' போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் புகழடைந்தார்.
தற்போது கே.சி.குரு இயக்கத்தில் உருவாகும் 'லைட்வெயிட் பேபி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஆர்த்தி கிருஷ்ணா கூறும்போது ''இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் '' என்றார்.