
பிளாஷ்பேக் : எம்ஜிஆர் கைவிட்ட உத்தம புத்திரன்
இதே படத்தை சற்று மேம்படுத்தி திரைக்கதை, வசனம் எழுதினார் ஸ்ரீதர். அதே பெயரில் இந்தப் படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்தார். பத்மினி, ராகினி ஹீரோயின்களாக நடித்தார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடக்கும்போது இதே படம் எம்ஜிஆர் நடிக்க இன்னொரு கம்பெனி தயாரிக்க ஏற்பாடு செய்து வந்தது. அப்போது பிரபலமாக இருந்த ராம்நாத் இயக்குவதாக முடிவாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், எம்ஜிஆரோடு மோத வேண்டாம் இந்த ப்ராஜக்டை டிராப் செய்து விடலாம் என்று தனது பங்குதாரர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அவர் படமும் வரட்டும், சிவாஜி படமும் வரட்டும் மக்களுக்கு எந்த படம் பிடிக்கிறதோ பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டனர்
ஒரே நாளில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்றும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தம புத்திரன் என்றும் இரண்டு தனித்தனி விளம்பரங்கள் ஒரே பத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் இந்த போட்டியில் இருந்து எம்ஜிஆர் விலகிக் கொண்டார். படத்தை பிரகாஷ்ராவ் இயக்கினார்.
பின்னாளில் இதுகுறித்து பேசிய எம்ஜிஆர். “என்னை விட சிவாஜி அந்த படத்திற்கு பொருத்தமானவர். நான் நடித்து அற்புதமான அந்த கதையை வீணாக்க விரும்பவில்லை. அதோடு என்னை தயாரிப்பாளர்கள் அணுகியபோதே இந்த கதைக்கு சிவாஜிதான் பொருத்தமாக இருப்பார் அவரை போய் பாருங்கள் என்றுதான் சொன்னேன். என்று கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!