Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரின் நிஜ ஹீரோ

02 ஏப், 2026 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-K.-Balachanders-real-hero
Advertisement

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்களை உருவாக்கியவர். ஆனால் அவர் நிஜயத்தில் ஹீரோவாக பார்த்தது டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை. 80களில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மனிதராக இருந்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி . 'மோட்டிவேஷன்' என்பதை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் படைப்புகள், எழுத்துகள் அன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம்.

எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குநர் கே.பாலசந்தரின் கல்லூரித் தோழர். இவரின் 'மக்கள் சக்தி இயக்கம்' தந்த ஈர்ப்பாலும் பாதிப்பாலும் கே.பாலச்சந்தர் இயக்கிய படம்தான் 'உன்னால் முடியும் தம்பி'. கே.பாலச்சந்தர் பயோபிக் படங்கள் எதையும் இயக்கியதில்லை. உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தியின் பயோபிக் படம் இல்லையென்றாலும் அவரது தத்துவங்களை பேசிய படம்.

படத்தின் நாயகனாக நடித்திருந்த கமல்ஹாசனின் பெயரும் உதயமூர்த்திதான் படத்தில் கமல்ஹாசன் பேசிய அனைத்தும் உதயமூர்த்தியின் வார்த்தைகள்தான். 'உன்னால் முடியும் நம்பு தம்பி', 'நம்பு தம்பி நம்மால் முடியும்', 'நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?' என்பன போன்ற உதயமூர்த்தியின் வாசகங்கள்தான் படத்தின் கரு. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் 'மக்கள் சக்தி இயக்கம்' என்பதை வலியுறுத்தும் விதமாக, 'அமைதிப் புரட்சி இயக்கம்' என்று வைத்திருப்பார் பாலசந்தர். ஊரின் பெயர் நல்லூர். இப்படி காட்சிக்குக் காட்சி, உதயமூர்த்தியை செதுக்கி இருப்பார் பாலசந்தர்.

இன்று நிஜ உதயமூர்த்தியை மக்கள் மறந்து விட்டாலும், 'உன்னால் முடியும்' தம்பி உதயமூர்த்தி காலத்தை கடந்தும் நிற்கிறார். படைப்பாளி மறையலாம், படைப்புகள் மறைவதில்லை என்பது இதுதானோ.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : விலங்குகளை நம்பிய  தேவர்பிளாஷ்பேக் : விலங்குகளை நம்பிய தேவர் ஹாய் : நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதை ஹாய் : நயன்தாராவுக்காக எழுதப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap