ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த 'யூத்' படம் வெற்றி பெற்றுள்ளது. 20 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் பாடல்களும் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் வந்ததால் அவர் ஹேப்பி. கென் இயக்கிய 'யூத்' படத்தில் அப்பா, மகன் பாசம் முக்கியமான விஷயமாக இருந்தது. அதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. அப்பாவாக நடித்த சுராஜ் வெஞ்சரமூடுக்கு பாராட்டுக்கு குவிந்து வருகின்றன.
இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 'ஹேப்பிராஜ்' படம் ரிலீஸ். இந்த படத்திலும் அப்பா, மகன் பாசம்தான் பிரதான விஷயமாம். இதில் ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக 'கைதி' உள்ளிட்ட படங்களில் கலக்கிய ஜார்ஜ் நடித்துள்ளார். படம் பார்த்தவர்கள் ஜார்ஜ் நடிப்பை குறிப்பிட்டு பேசி வருகிறார்கள். யூத் பட பாணியில் இளைஞர்கள் மத்தியில், கல்லுாரிகளில் ஜி.வி.பிரகாசும் படத்தை புரமோட் செய்து வருகிறார். யூத் படத்தில் இசையமைப்பாளராக வெற்றி பெற்றவர், ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பது இந்த வாரம் தெரிந்துவிடும். ஹேப்பிராஜ் படத்துக்கு இசையமைத்தவர் ஜஸ்டின் பிரபாகர்.




