'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'ப்ரோ கோட்'. ரவி மோகன் தயாரிக்கும் முதல் படம் இது. இப்படம் அறிவிக்கப்பட்ட உடனே 'ப்ரோ கோட்' எங்கள் பிராண்ட் நேம் எனவே இந்த தலைப்பை உபயோகிக்க கூடாது என்று டில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இரண்டு தரப்பும் கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் தெரிவித்தபடி இரண்டு தரப்புக்கு உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
அதாவது தலைப்பை பயன்படுத்த பெரிய தொகை தரவேண்டும், அல்லது படத்தில் எங்கள் தயாரிப்பை புரமோட் செய்ய வேண்டும் என்று மதுபான கம்பெனி தரப்பில் கேட்டதாகவும் இதற்கு ரவிமோகன் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை வெளியிட்ட புரமோசன்கள், வீடியோக்களில் இருந்து 'ப்ரோ கோட்' என்ற தலைப்பை நீக்கி, 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' என்று சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.