இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி | 25 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஆனந்தம்' | பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” | வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல் | முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' |

ரகுவரன் அறிமுகமான காலங்களில் பல படங்களில் கதை நாயகனாக நடித்தாலும் அவை குடும்ப கதாபாத்திரங்களாகவே இருந்தது. பல ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். ஆனாலும் அவரும் ஒரு படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார் அந்த படம் மைக்கேல் ராஜ்.
'மைக்கேல் ராஜ்' என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த அவர் தன்னைச் சுற்றி நடக்கும் குற்றங்கள், ஊழல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். வி.சி.குகநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை டி. ராமா நாயுடு தயாரித்தார். சரத் பாபு, பேபி ஷாலினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர், வெங்கடேஷ், ரச்சனி நடிப்பில் 'பிரேம புத்ருடு, என தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.




